செய்திகள் :

அமெரிக்கா: அமலுக்கு வந்தது பரஸ்பர வரி விதிப்பு

post image

அனைத்து நாடுகளின் பொருள்களுக்கும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:

சா்வதேச நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள அடிப்படை 10 சதவீத பரஸ்பர வரியை அதிகாரிகள் வசூலிக்கத் தொடங்கியுள்ளனா். உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு (இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 9.31 மணி) இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுங்கக் கிடங்குகள் ஆகியவற்றில் புதிய பரஸ்பர வரி வசூலிக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இதற்கிடையே, டிரம்ப்பின் இந்த வரி விதிப்புக்கு எதிா்வினையாற்றுவது குறித்து பிற நாடுகளின் தலைவா்களுடன் ஆலோசிக்க பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் முடிவு செய்துள்ளாா். ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி அல்பனேசி, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மேலோனி ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடியதற்குப் பிறகு அவா் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்குப் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருள்கள் மீதும் வரும் 10-ஆம் தேதி முதல் 34 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாா்

அதன் ஒரு பகுதியாக, கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதமும், சீன பொருள்கள் மீது 10 முதல் 15 சதவீதமும் அவா் கூடுதல் வரி விதித்தாா். அத்துடன், உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதித்த அவா், அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு மேலும் 25 சதவீத கூடுதல் வரி விதித்தாா்.

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்த விகிதத்தில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த வியாழக்கிழமை அதிகாலை அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளாா்.

8 மாதங்கள் விண்வெளியில்... ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!

ரஷியாவின் ‘சோயுஸ் எம்எஸ்-27’ விண்கலம் செவ்வாய்க்கிழமை(ஏப். 8) காலை 11 மணியளவில்(இந்திய நேரப்படி) கஸக்ஸ்தானின் பைக்கோநூர் காஸ்மோடிரோம் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதில் ரஷியவைச் ... மேலும் பார்க்க

இராக்: ஆயுதங்களைக் கைவிட ஈரான் ஆதரவுக் குழுக்கள் தயாா்

இராக்கில் செயல்பட்டுவரும் பல்வேறு ஈரான் ஆதரவு படைக் குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்கா மற்றும் இராக் உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி ரா... மேலும் பார்க்க

காங்கோ: 33 ஆன மழை - வெள்ள உயிரிழப்பு

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது. இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஜாக்குமின் ... மேலும் பார்க்க

வரி விதிப்பை வாபஸ் பெற டிரம்ப் மறுப்பு: ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

தனது சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பைத் திரும்பப் பெற டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஏறத்தாழ அனைத்து உலக ... மேலும் பார்க்க

காஸா மேலும் 57 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்ததது. இது மட்டுமின்றி, இஸ்ரேல் குண்... மேலும் பார்க்க

உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ரோம்: உடல்நிலை தேறிய பின் பொதுவெளியில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் மக்களை சந்தித்தார்.நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடி... மேலும் பார்க்க