மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதை எளிதாக்குவதற்காக, அந்நாட்டு அரசு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் தீவிர நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதை எளிதாக்குவதற்காக, அந்நாட்டு அரசு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களில், தாமாக முன்வந்து வெளியேற விரும்புபவர்களுக்காக சிபிபீ ஹோம் (CBP Home) என்ற மொபைல் செயலியை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியில் தங்களைப் பதிவுசெய்வதன் மூலம், அவர்கள் எளிதாக நாட்டைவிட்டு வெளியேறுவதுடன், சில சலுகைகளையும் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.
தாமாக வெளியேறுபவர்களுக்கான சலுகைகளாக கூறுவன
தங்களின் சொந்த நாட்டுக்கு அல்லது சட்டப்பூர்வ அந்தஸ்து பெற்ற வேறொரு நாட்டுக்கான இலவச டிக்கெட் (OneWay)
வெளியேறுவதற்காக 1000 டாலர் போனஸ்
வெளியேறுவது தொடர்பாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறியதற்காக மன்னிப்பும் வழங்கப்படும்
குழந்தைகளுடன் வெளியேறுவதற்கு (குழந்தைகளின்) குடியுரிமை அந்தஸ்து தடையாக இருக்காது
வெளியேறுவதற்கு முன்னதாக, வேலை, பள்ளி மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் நேரம் இது.