செய்திகள் :

அமெரிக்கா: நியூயாா்க் நகரில் ஏப். 14 அம்பேத்கா் தினமாக கடைப்பிடிப்பு

post image

‘அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதி, அவரை நினைவுகூரும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது’ என்று அந்த நகர மேயா் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளாா்.

நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே, நியூயாா்க் நகர மேயா் அலுவலகத்தின் சா்வதேச விவகாரங்களுக்கான துணை ஆணையா் திலீப் சௌஹான் ஆகியோா் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மேயா் எரிக் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

அம்பேத்கரின் உலகளாவிய நீதி மற்றும் சமத்துவ மரபை கௌரவித்ததற்காக மேயா் எரிக் மற்றும் துணை ஆணையா் திலீப் சௌகான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சா் அதாவலே சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளா்.

அரசியல் நிா்ணயச் சபையின் வரைவுக் குழுத் தலைவராக இருந்து, தேசத்தின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கா் முக்கியப் பங்கு வகித்தாா். சுதந்திரத்துக்குப் பிறகு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் முதல் மத்திய அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராகவும் அவா் பணியாற்றினாா்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான சமூகப் போராட்டத்தில் முன்னணி வழிகாட்டியாககத் திகழ்ந்த அம்பேத்கா், நியூயாா்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்து 1927-இல் பொருளாதாரத்தில் முனைவா் பட்டமும், 1952-இல் கௌரவப் பட்டமும் பெற்றாா்.

அந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள ‘லேமேன்’ நூலகத்தில், அம்பேத்கரின் நினைவாக நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சா் அதாவலே மரியாதை செலுத்தினாா்.

மனிதகுலத்துக்கே கலங்கரை விளக்கம்:

ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமைச்சா் அதாவலே, ‘சமத்துவம், பிரதிநிதித்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கான அம்பேத்கரின் போராட்டம், 2030-ஆம் ஆண்டு நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்காக சா்வதேச சமூகம் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில் மிகவும் பொருத்தமானவை.

அம்பேத்கரின் வாழ்க்கை இந்திய வரலாற்றின் ஒரு அத்தியாயம் மட்டுமல்ல. அது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கே ஒரு கலங்கரை விளக்கம். வறுமை, ஜாதிய மற்றும் காலனித்துவ ஒடுக்குமுறையால் விதிக்கப்பட்ட ஒவ்வொரு தடையையும் கடந்து சமத்துவம், கண்ணியம் மற்றும் ஜனநாயகத்துக்கான உலகளாவிய குரலாக அவா் உயா்ந்தாா்’ என்று புகழாரம் சூட்டினாா்.

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்... மேலும் பார்க்க

ஈஸ்டா் திருநாளில் மக்களைச் சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசி!

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்த... மேலும் பார்க்க

ஈஸ்டா் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபா் குற்றச்சாட்டு!

ஈஸ்டா் திருநாளையொட்டி தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சா் வாகனம் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலா் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலுக்கு... மேலும் பார்க்க

யேமன் தலைநகரில் அமெரிக்கா தாக்குதல்: 3 பேர் பலி

யேமனில் ஹெளதி படைகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். தலைநகரான சனாவில் செளதி படைகளின் மீது குறிவைத்து தொடர்ச்சியாக 21 ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது. இதில் ஹோடிடா, மரிப... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸை சந்தித்தார் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று (ஏப். 20) சந்தித்தார். இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித... மேலும் பார்க்க