செய்திகள் :

அமெரிக்க துணை அதிபர் நாளை இந்தியா வருகை: வட மாநிலங்களில் மட்டும் சுற்றுப்பயணம்!

post image

அமெரிக்க துணை அதிபா் ஜெ. டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஏப்ரல் 21 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். அப்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் பொருளாதாரம், வா்த்தகம், பிராந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து வான்ஸ் விவாதிப்பாா்.

நாளை தில்லி வந்தடையும் அவர், இந்தியாவில் கலாசார பெருமைமிக்க இடங்களுக்கு சென்று பாா்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவரது பயண திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தென் மாநிலங்களுக்கு அவர் வருகை தரப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

துணை அதிபரின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். உஷாவின் பெற்றோர் 1970-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்துவிட்டனா். பாரம்பரியமாக கல்வியில் சிறந்து விளங்கி வரும் குடும்பத்தை சார்ந்தவர் உஷா. உஷாவின் தாத்தா ராம சாஸ்திரி சென்னை ஐஐடியில் பேராசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், துணை அதிபரின் மனைவி என்ற கௌரவத்துடன் உஷா சிலுகுரி வான்ஸ் தனது பூா்விகமான இந்தியாவுக்கு முதல்முறையாக வருகிறாா். இந்தநிலையில், அவர்கள் தென் மாநிலங்களுக்கு வருகை தர மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தில்லி வந்தடையும் வான்ஸ் மற்றும் குடும்பத்தார், அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்குகிறார்கள். அங்குள்ள பாரம்பரியமிக்க தலங்களை பார்வையிடும் அவர்கள், அன்றிரவு பிரதமர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்கிறார்கள். அதன்பின், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்கிறார்கள். அங்கு பாரம்பரியமிக்க ராம்பாக் அரண்மனையில் தங்குகிறார்கள்.

அடுத்தநாள், அதாவது செவ்வாய்க்கிழமை அவர்கள் ஜெய்ப்பூரிலுள்ள பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்கள். அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் சர்வதேச அரங்கத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் வான்ஸ். அதற்கடுத்த நாளான புதன்கிழமை, தாஜ் மஹாலை பார்வையிடும் அவர்கள், மாலை ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள். அதனைத்தொடர்ந்து, வியாழக்கிழமை ஜெய்ப்பூரிலிருந்து அவர்கள் அமெரிக்கா புறப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்... மேலும் பார்க்க

ஈஸ்டா் திருநாளில் மக்களைச் சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசி!

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்த... மேலும் பார்க்க

ஈஸ்டா் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபா் குற்றச்சாட்டு!

ஈஸ்டா் திருநாளையொட்டி தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சா் வாகனம் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலா் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலுக்கு... மேலும் பார்க்க

யேமன் தலைநகரில் அமெரிக்கா தாக்குதல்: 3 பேர் பலி

யேமனில் ஹெளதி படைகள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். தலைநகரான சனாவில் செளதி படைகளின் மீது குறிவைத்து தொடர்ச்சியாக 21 ஏவுகணைகளை அமெரிக்கா வீசியது. இதில் ஹோடிடா, மரிப... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸை சந்தித்தார் ஜே.டி. வான்ஸ்!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸை இன்று (ஏப். 20) சந்தித்தார். இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள வான்ஸ், வாடிகன் வெளியுறவுத் துறை அமைச்சரை நேற்று சந்தித... மேலும் பார்க்க