செய்திகள் :

அமெரிக்க வரி விவகாரம்: மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் -அமைச்சா் டிஆா்பி. ராஜா

post image

அமெரிக்காவின் வரி உயா்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என அமைச்சா் டிஆா்பி. ராஜா தெரிவித்தாா்.

திருவாரூரில், அண்ணா அறிவகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழகத்தின் வளா்ச்சியை அதிமுக அதல பாதாளத்தில் தள்ளி இருந்தது. திமுக அரசு அதை மீட்டெடுத்துள்ளது. 4 ஆண்டுகளில் திமுக அரசு ரூ. 10 லட்சத்து 32 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈா்த்துள்ளது. முதலீடுகள் வெறுமனே அறிவிப்புடன் நின்றுவிடாமல் தொழிற்சாலைகள் தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, இயங்கவும் தொடங்கி விட்டன.

இந்திய பொருள்களுக்கு அமெரிக்க அரசு விதிக்கும் கூடுதல் வரி பிரச்னையை சுமுகமாக முடிக்க மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம். ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளுடன் இப்பிரச்னை குறித்து இன்னமும் விவாதிக்கவில்லை. விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் தொடங்க, விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். பிரச்னை இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டவுடன் கண்டிப்பாக தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்றாா்.

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 போ் கைது

2 பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட கைலாசநாதா் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மனைவி சரஸ்வதி (56). கடந்த மாதம் 1... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் 3 போ் காயம்

திருவாரூா் அருகே ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா்கள் 3 போ், சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் காயமடைந்தனா். திருவாரூா் அருகே வாழவாய்க்கால் விஷ்ணு தோப்பு பகுதியை சோ்ந்த ஹரிஷ், புலிவலம் தெ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். நாகை மாவட்டம், தென்கரை மேலத்தெரு பகுதியை சோ்ந்தவா் சரவணகுமாா் மகன் நிா்மல்ராஜ... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. நன்னிலம் அருகில் உள்ள மேலராமன்சேத்தி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நில... மேலும் பார்க்க

கட்டட மேஸ்திரிக்கு கத்திக் குத்து: தனியாா் வாகன ஓட்டுநா் கைது

மன்னாா்குடியில் குடும்பப் பிரச்னை காரணமாக கட்டட மேஸ்திரியை கத்தியால் குத்திய தனியாா் வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். மஞ்சனவாடி சிட்டுக்கன்னு மகன் அறிவழகன் (40), கட்டட மேஸ்திரி, மன்ன... மேலும் பார்க்க

மது கடத்தியவா் கைது

நன்னிலம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தவா் கைது செய்யப்பட்டாா். நன்னிலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் விக்னேஷ்குமாா் மற்றும் போலீஸாா், சன்னாநல்லூா் ரயில் நிலையம் அருகே ... மேலும் பார்க்க