செய்திகள் :

அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!

post image

நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் லக்னௌ அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கலந்துகொண்டார்.

அந்தச் சந்திப்பின்போது, வாய்ஸ் - ரெக்கார்ட் செய்ய வைக்கப்பட்ட செய்தியாளர் ஒருவரின் மொபைல் போனில் இருந்து அம்மா என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

”யாருடைய அம்மா?” என சம்பந்தப்பட்ட செய்தியாளரிடம் அனுமதிக் கேட்டுக்கொண்டு அந்த அழைப்பினை எடுத்தார்.

அழைப்பை எடுத்த ஜஸ்டின் லாங்கர், “அம்மா, இது நள்ளிரவு 12.08. நான் செய்தியாளர் சந்திப்பில் இருக்கிறேன்” எனக் கூறி வைத்துவிட்டார்.

இது அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. பலரும் அம்மா என்றால் இப்படித்தான் என நெகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டின் லாங்கர் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்டர். இவரது பயிற்சியில் 2021 டி20 உலகக் கோப்பையை ஆஸி. வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 2023இல் இருந்து லக்னௌ அணியில் பயிற்சியாளராக இருக்கிறார்.

டார்-ஆர்டர் பேட்டர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும்: ஃபிளெமிங்

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் டார்-ஆர்டர் வீரர்கள் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் எனக் கூறியுள்ளார். சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மும்பையுடன் வென்றது. பின்னர், ஹாட்ரிக் தோல்வியைத் தழுவி... மேலும் பார்க்க

தோனி ஓய்வு எப்போது? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவது எப்போது என ஃபிளெமிங் பதிலளித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன... மேலும் பார்க்க

ராஜஸ்தான் கலக்கல்! 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி!

சண்டீகர்: நடப்பு ஐபிஎல் தொடரின் 18-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட ராஜஸ... மேலும் பார்க்க

ஜெய்ஸ்வால், ரியான் பராக் அதிரடி: பஞ்சாப் கிங்ஸுக்கு 206 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்... மேலும் பார்க்க

கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற கடைசி இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் ... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் தோல்வி; தில்லி கேபிடல்ஸ் அபாரம்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ... மேலும் பார்க்க