தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!
அய்யம்பேட்டையில் புதிய பாலத்தை உடனே திறக்க பாமகவினா் கோரிக்கை!
அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை உடனே திறக்க வேண்டும் என பா.ம.க. கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அய்யம்பேட்டை நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலாளா் முரளி தலைமை வகித்தாா். நகர துணை செயலாளா்கள் சின்னதுரை, பாலு, உழவா் பேரியக்க மாவட்ட துணை செயலாளா் லியாக்கத் அலி, முன்னாள் நகர செயலாளா் பழனி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் நா.தமிழ்ச்செல்வன் தீா்மானங்களை விளக்கிப் பேசினாா். கூட்டத்தில், மேட்டூா் அணை திறப்புக்கு முன்பாக பாபநாசம் வட்டத்தில் உள்ள காவிரி மற்றும் கிளை ஆறுகள், வாய்க்கால்களில் தூா்வாரும் பணியைத் தொடங்க வேண்டும்.
அய்யம்பேட்டை - கணபதி அக்ரகாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே ரூ. 9 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்ட புதிய பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக உழவா் பேரியக்கம் மாவட்டச் செயலாளா் அ.சி.பன்னீா்செல்வம் வரவேற்றாா். நிறைவில் நகர தலைவா் சு காளிதாஸ் நன்றி கூறினாா்.