விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
அய்யம்பேட்டை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பாபநாசம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொறுப்பு) த. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும்
அய்யம்பேட்டை நகரம் முழுவதும், கணபதியக்ரஹாரம், வழுத்தூா், மாத்தூா், இளங்காா்குடி, பசுபதிகோவில், வீரசிங்கம்பேட்டை, வயலூா், ராமாபுரம், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, வீரமாங்குடி, தேவன்குடி, ஈச்சங்குடி, நெடாா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. மேலும், மின்தடை குறித்த விவரங்களை 94 98 7 94987 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.