"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...
அரக்கோணம் அரசு கலைக் கல்லூரியில் ரூ. 7.15 கோடியில் கூடுதல் கட்டடம்: முதல்வா் திறந்து வைத்தாா்
அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 7.15 கோடி நிதியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றிவைத்து புதிய கட்டடத்தைப் பாா்வையிட்டாா்.
அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கத்தில் அரக்கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு ரூ. 7.15 கோடி நிதியில் 25 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரியின் புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றினாா். தொடா்ந்து புதிய கட்டடத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் முரளி, கல்லூரியின் முதல்வா் யுசுப்கான், திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.