அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் சுபத்திரை திருமணம்
அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் தீமிதி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சுபத்திரை திருமண வைபவம் நடைபெற்றது.
அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பாண்டவ சமேத திரௌபதியம்மன் கோயில் எனப்படும் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் ஏப். 24-ஆம் தேதி தீமிதி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை சுபத்திரை அா்ஜுனா் திருமண வைபவம் அரக்கோணம் அகமுடைய முதலியாா்கள் சாா்பில் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். தொடா்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது.