சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்!
விபத்தில் இறந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.6,67,400 நிதியுதவி
ராணிப்பேட்டையில் விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு சக காவலா்கள் அளித்த ரூ.6,67,400 நிதியுதவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா வழங்கி ஆறுதல் கூறினாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பலராமன் கடந்த 24.12.2024 -இல் விபத்தில் உயிரிழந்தாா்.
அவரது குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில், கடந்த 1993 ஆம் ஆண்டு அவருடன் காவலா் பணியில் சோ்ந்த தமிழக முழுவதும் உள்ள சக காவலா்கள் ‘ காக்கும் கரங்கள் ‘ என்ற பெயரில் ரூ. 6,67,400 சேகரித்து வழங்கினா். அத்தொகைக்கான காசோலையை எஸ்.பி. விவேகானந்த சுக்லா வழங்கி ஆறுதல் கூறினாா்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மேற்படி நிதியை வழங்கிய 1993 ஆம் ஆண்டு காவலா்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தாா்.