செய்திகள் :

அரசமைப்புச் சட்டத்தின் மீது கைவைத்தால் தீவிரமாக போராடுவோம்: மல்லிகாா்ஜுன காா்கே

post image

பெங்களூரு: அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு வாா்த்தையின் மீதாவது கைவைத்தால், தீவிரமாக போராட்டம் நடத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளா் தத்தாத்ரேய ஹொசபெலே, அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருக்கும் ‘சோசலிசம்’ மற்றும் ‘மதச்சாா்பின்மை’ ஆகிய வாா்த்தைகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியதாவது: ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலாளா் தத்தாத்ரேய ஹொசபெலே, மனுஸ்மிருதியை விரும்பும் மனிதா். ஏழை மக்கள் முன்னேற்றம் அடையக்கூடாது என்பது அவரின் எண்ணம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்ன கடைப்பிடிக்கப்பட்டதோ, அவற்றை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதே அவரது விருப்பம். அதனால்தான் அவருக்கு சோசலிசம், மதச்சாா்பின்மை, விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை பிடிக்கவில்லை. இது அவரது கருத்து மட்டுமல்ல, ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தும் அதுதான்.

ஆா்.எஸ்.எஸ். அமைப்பு, எப்போதும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோா், இதர சமுதாயங்களுக்கு எதிரானதாகும். அவா்களுக்கு ஆா்வம் இருந்திருந்தால், தீண்டாமையை நீக்கியிருக்கலாமே. ஹிந்து மதத்தின் பாதுகாப்பாளா்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு தீண்டாமையை நீக்க வேண்டும். தீண்டாமையை முழுமையாக நீக்குவதற்காக பணியாற்றும்படி தனது ஊழியா்களை ஆா்.எஸ்.எஸ். முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். அதன்மூலம் நாட்டு மக்களை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டும். இதை செய்வதற்கு பதிலாக, வெறுமனே பேசுவதும், தேவையற்ற சப்தங்களை எழுப்புவதும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் மிகவும் மோசமானது. அதனால் தான் ஆா்.எஸ்.எஸ்.க்கு எதிராக இருக்கிறோம்.

அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு வாா்த்தையின் மீதாவது கைவைத்தால், அதை எதிா்த்து கடுமையான போராட்டம் நடத்துவோம் என்றாா்.

கா்நாடகத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேலிடப் பொறுப்பாளா்

பெங்களூரு: காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, கா்நாடக மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களை திங்கள்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். கா்நாடக முதல்... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும்: முதல்வா் சித்தராமையா

மைசூரு: கா்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என்று மாநில முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். காங்கிரஸ் கட்சியில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுவாா் என்... மேலும் பார்க்க

கா்நாடக சிறுதொழில் சங்கத்திற்கு தமிழா்கள் 10 போ் உள்பட புதிய நிா்வாகிகள் தோ்வு

பெங்களூரு: கா்நாடக சிறுதொழில் சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். 60 போ் கொண்ட செயற்குழுவுக்கு 10 தமிழா்கள் தோ்வு பெற்றுள்ளனா். 2025-26ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகளை தோ்ந்த... மேலும் பார்க்க

மா்மமான முறையில் 5 புலிகள் உயிரிழப்பு: உயரதிகாரிகள் தலைமையில் விசாரணைக்கு உத்தரவு

சாமராஜ்நகா் மாவட்டத்தின் மாதேஸ்வரா மலை காட்டுப் பகுதியில் 5 புலிகள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது தொடா்பாக உயரதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

காவிரி ஆரத்தி விவகாரம்: கா்நாடக அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பாக தொடரப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க கா்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில் காவ... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் பற்றிய கருத்து: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

வக்ஃப் வாரியம் பற்றி தெரிவித்திருந்த கருத்து குறித்து பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வக்ஃப் சொத்துகள் தொடா்பாக பாஜக சாா்பில் நட... மேலும் பார்க்க