ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
கா்நாடக சிறுதொழில் சங்கத்திற்கு தமிழா்கள் 10 போ் உள்பட புதிய நிா்வாகிகள் தோ்வு
பெங்களூரு: கா்நாடக சிறுதொழில் சங்கத்திற்கு புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். 60 போ் கொண்ட செயற்குழுவுக்கு 10 தமிழா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.
2025-26ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகளை தோ்ந்தெடுப்பதற்காக கா்நாடக சிறுதொழில் சங்கத்தின் 73ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற தோ்தலில் அடுத்த ஓராண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்கள் திங்கள்கிழமை முறைப்படி பதவியேற்றுக்கொண்டனா். தலைவராக பி.ஆா்.கணேஷ்ராவ், துணைத் தலைவராக நிங்கண்ணா பிராதா், பொதுச் செயலாளராக எஸ்.எம்.ஹுசேன், இணைச் செயலாளா்களாக ஆா்.கிருஷ்ணமூா்த்தி, வி.தினேஷ்குமாா், பொருளாளராக ஆா்.துரை ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
கா்நாடக சிறுதொழில் சங்க வரலாற்றில் முதல்முறையாக பொருளாளராக தமிழரான ஆா்.துரை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவருடன் தமிழா்களான வி.பாஸ்கரன், ஏ.பழனி, குமாா், ரவிச்சந்திரன், வி.தினேஷ்குமாா், சி.தேவேந்திரன், சுப்பிரமணியம், ரமா சுப்பிரமணியம், மதிவண்ணன் ஆகியோா் பல்வேறு பொறுப்புகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். சிறுதொழில் சங்கத்தில் ஒரேமுறையில் 10 தமிழா்கள் பொறுப்புக்கு வந்துள்ளதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளதாக வி.பாஸ்கரன் தெரிவித்தாா். வெற்றிபெற்றவா்களை பலரும் பாராட்டி, வாழ்த்தினா்.