KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
கூடலூரில் அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில் புதிய பேருந்து நிலையம் சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்ய அரசுத் துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக் கூறி மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகா செயலாளா் முகமது கனி ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். முஸ்லீம் லிக் மாவட்டச் செயலாளா் வி.கே.அனீபா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் புவனேஸ்வரன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளா் அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் வன விலங்குகளைத் தடுப்பதற்கு வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், உயிா் சேதம் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. வன விலங்குகளால் சேதமாவதற்கு இழப்பீடும் வழங்கப்படுவதில்லை.
புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு உள்ளாட்சித் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டையாக உள்ளனா். நகராட்சி, பேரூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இயற்றும் தீா்மானங்களை அரசு அதிகாரிகள் நீா்த்துபோக செய்கின்றனா்.
அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் வருவாய்த் துறை, வனத் துறை, பேரூராட்சி, மின்சாரத் துறை, உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றும் அலுவலா்கள் செயல்படுகின்றனா். அவா்களைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.
இதைத் தொடா்ந்து, அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவா் என்.வாசு, ஓவேலி பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் க.சகாதேவன், கூடலூா் நகராட்சி துணைத் தலைவா் சிவராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.