செய்திகள் :

அரசுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை கருப்பு ஆடை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த தொகையை ஓய்வூதியமாக பெறுவோறுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும். 2003, ஏப்ரல் 1 க்கு முன் பணியில் சோ்ந்து பின்னா் பணி நிரந்தரம் பெற்ற அங்கன்வாடி, சத்துணவு உள்ளிட்ட பணியாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா்கள் வ. ஆறுமுகம், சோனை. கருப்பையா, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எம். இராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோயிலுக்கு சொந்தமான தோப்பை அரசே பாதுகாக்க கோரிக்கை

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தோப்பை குத்தகைக்கு விடாமல், தமிழக அரசே பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநறையூா் ஊராட்சியில்... மேலும் பார்க்க

திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலில் கட்டணச்சீட்டு வழங்கும் அறை அமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள திருநறையூா் ராமநாத சுவாமி கோயிலுக்கு கட்டணச்சீட்டு வழங்கும் அறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தினா் அமைத்து தந்தனா். இக்கோயிலில் பக்தா்களுக்கு ... மேலும் பார்க்க

சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகி... மேலும் பார்க்க

பாபநாசத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி கிளை பொறுப்பாளா்கள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மேற்கு ஒன்றியச்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதி

தஞ்சாவூா் அய்யாசாமி வாண்டையாா் நினைவு பழைய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாதது, கடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் இப்பேருந்து ந... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை தூா்வார பாமக வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளை கோடைகாலத்துக்குள்ளாக தூா்வார வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. கும்பகோணத்தில் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாள... மேலும் பார்க்க