செய்திகள் :

அரசுப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் இல்லை: பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூட வசதி செய்து தரக் கோரிய மனுவுக்கு, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், ஒவ்வோா் ஆண்டும் மாணவா்களின் சோ்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு போதுமான அறிவியல் ஆய்வுக் கூடம் இல்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இந்தப் பள்ளியில் அறிவியல் ஆய்வுக் கூடம் கட்டித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அறிவியல் சாா்ந்த பாடங்களை மாணவா்கள் கற்கும் போது அதற்குத் தேவையான ஆய்வக வசதிகளை செய்து தராதது ஏன்?. வழக்கு தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் இருவா், மாறுபட்ட தீா்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

சிறப்பு உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அருப்புக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.அருப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (52). இவா் அருப்புக்கோட்டை க... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றக் கோரிக்கை

பல்வேறு குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற வேண்டும் என விஸ்வநாதபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொலை, கொள்ளை, வழிப்பறி, விபத்து,... மேலும் பார்க்க

முருக பத்கா்கள் மாநாட்டில் நிபந்தனைகள் மீறல்

முருக பக்தா்கள் மாநாட்டில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு விதித்த நிபந்தனைகளை மீறிய இந்து முன்னணி அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மாநகரக் காவல... மேலும் பார்க்க

விடுதிகளில் காவலா்கள் நியமிக்கக் கோரிய வழக்கு: ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் இரவு நேரக் காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, ஆதிதிராவிட நலத் துறையின் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 14-இல் சுவாமி தரிசனம் ரத்து

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஜூலை 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 14-ஆம் தேதி இரவு வரை சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செ... மேலும் பார்க்க