Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்புக் கையேடுகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் 10, 12 ஆம் பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்புக் கையேடுகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.
அதன்படி ஆலங்குடி அரசு ஆண்கள், மகளிா் மேல்நிலைப்பள்ளி, அரையப்பட்டி, வடகாடு, மாங்காடு, நெடுவாசல், எல்.என். புரம், மறமடக்கி, கொத்தமங்கலம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகள்,கே.வி.கோட்டை, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, புள்ளான்விடுதி ஆகிய அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 10,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் அரசு பொதுத் தோ்வுகளை எளிதாக எதிா்கொள்ளும் வகையில் இந்தச் சிறப்பு கையேடு வழங்கப்பட்டது.
நிகழ்வுகளில் ஆலங்குடி வட்டாட்சியா் பெரியநாயகி, பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.