நத்தம் அருகே நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் கைது
பெரம்பலூா் அருகே அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த நடேசன் மகன் ரத்தினம் (60). கழைக் கூத்தாடியான இவா், வெள்ளிக்கிழமை மாலை பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து நெய்க்குப்பை செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்தாா். அப்போது, ரத்தினம் அருகே நின்றுக்கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அந்தச் சிறுமி தன்னுடன் பயணித்த தனது தாத்தாவிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, சிறுமியின் தாத்தா உள்ளிட்ட பயணிகள் ரத்தினத்தை தாக்கி பேருந்திலிருந்து இறக்கிவிட்டுள்ளனா். மேலும், பாதிப்புக்குள்ளான சிறுமியின் தாத்தா அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரத்தினத்தை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.