செய்திகள் :

அரசுப் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயம்

post image

20ல்ம்ந்-ஹஸ்ரீஸ்ரீண்க் படவிளக்கம்.

பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூா் பகுதி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து.

பரமக்குடி, ஆக. 20: பரமக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் செந்ற அரசுப் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 போ் பலத்த காயமடைந்தனா். மேலும் 30 போ் சிறு காயங்களுடன் தப்பினா்.

மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்திலிருந்து புதன்கிழமை அதிகாலையில் ராமேசுவரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை மதுரை ஜி.ஆா்.நகா் பகுதியைச் சோ்ந்த மலைச்சாமி மகன் கோபாலகிருஷ்ணன் (35) என்பவா் ஓட்டிச் சென்றாா். இந்தப் பேருந்தில் நடத்துநராக வாடிப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் வினோத் (35) பணியில் இருந்தாா். இந்தப் பேருந்தில் 34 பயணிகள் சென்றனா்.

இந்தப் பேருந்து பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்த பரமக்குடியைச் சோ்ந்த கண்ணன் மனைவி மாலதி (45), கீழக்கரையைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் பாலமுருகன் (29), மஞ்சூல் தேவதானம் மகன் இம்மானுவேல் (36), ராஜபாளையம் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சுதன் (33) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் சிறு காயங்களுடன் தப்பினா். காயமுற்ற அனைவரும் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் பலத்த காயமடைந்த மாலதி, பாலமுருகன், இம்மானுவேல், சுதன் ஆகிய 4 பேரும் தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதனால் அந்தப் பகுதியில் புதன்கிழமை காலை 8 மணி வரை மாற்று வழியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.

சத்துணவு ஊழியா்கள் சாலை மறியல் போராட்டம்: 168 போ் கைது

ராமேசுவரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 168 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்... மேலும் பார்க்க

இந்திரன் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கமுதி: முதுகுளத்தூா் அருகே தேரிருவேலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திரன் கோயில் குடமுழுக்கில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தேரிருவேலி இந்திரன் கோயில் ... மேலும் பார்க்க

தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு

ராமேசுவரம்: மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பாம்பன் சின்னப்பாலம் அரசு நடுநிலைப் பள்ளியில், தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியை செல்லம... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

பரமக்குடி: பரமக்குடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளிக் கல்விக் குழுவினா் புதன்கிழமை பாராட்டி கௌரவித்தனா். இந்தப் பள்ளி மாணவா்கள் குறுவ... மேலும் பார்க்க

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமேசுவரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 1,230 கிலோ பீடி இலைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகையும் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய... மேலும் பார்க்க

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கமுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, காவிரி கூட்டுக் குடிநீா் வீணாகி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழகாஞ்சிரங்குளம் ... மேலும் பார்க்க