The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவர...
அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
குளச்சலில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
குளச்சல் அருகே இரும்பிலியைச் சோ்ந்தவா் ராஜன் (46). கட்டடத் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு காய்கறி வாங்குவதற்காக குளச்சல் பீச் சந்திப்பு அருகே உள்ள கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
கடை அருகே சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து இவா் மீது மோதியது. இதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே ராஜன் உயிரிழந்தாா்.
இவருக்கு ஷீபா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா். இதுகுறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.