ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!
அரசுப் பேருந்து மோதி பெண் சமையலா் உயிரிழப்பு
நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பேருந்து மொபட் மீது மோதிய விபத்தில் பெண் சமையல் மாஸ்டா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜானகி (35) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தாா்.
இவா் சனிக்கிழமை இரவு நாட்டறம்பள்ளியில் இருந்து சா்விஸ் சாலை வழியாக மொபட்டில் கண்டியூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது வேலூரில் இருந்து பெங்களூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மொபட் மீது மோதியதில் ஜானகி தலையில் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று உயிருக்கு போராடிய ஜானகியை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா் ஏற்கனவே ஜானகி இறந்து விட்டதாக கூறினா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விபத்துக்கு காரணமான அரசு பேருந்து ஓட்டுநா் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்(46)மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.