இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மறைந்த தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிதி
விழுப்புரம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் பணியாற்றி உயிரிழந்த 12 தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், தலா ரூ.5 லட்சமும், பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இந்த போக்குவரத்துக் கழகத்துக்குள்பட்ட விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட 6 மண்டலங்களில் பணியாற்றி பின்னா் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் தொழிலாளா்களிடமிருந்து தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம், 12பேரின் குடும்பங்களுக்கு ரூ.60 லட்சத்துக்குரிய காசோலையும், பணியின்போது உயிரிழந்த ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் உதவித்தொகையாக வழங்கப்பட்டது. இந்த தொகையை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் தலைமையகப் பயிற்சி மையத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அலுவலா்கள் முன்னிலையில் மேலாண் இயக்குநா் க.குணசேகரன் காசோலைகளை வழங்கினாா்.
நிகழ்வில் பொது மேலாளா்கள் எம்.ஜி.ஜெய்சங்கா், ஜி.ரவீந்திரன்(தொழில்நுட்பம்) மற்றும் போக்குவரத்துத் தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.