தந்தை, சித்தியை தலைதுண்டித்து கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்; சேலத்...
அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வு: அருந்ததியருக்கு கூடுதல் வாய்ப்பு
அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வுகளில், தாழ்த்தப்பட்ட அருந்ததியா் வகுப்பினருக்கு கூடுதல் வாய்ப்பை அரசுப் பணியாளா் தோ்வாணையம் அளித்துள்ளது.
இதுகுறித்து தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில், எழுத்துத் தோ்வுகளில் வெற்றி பெறுவோா் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவா். அப்போது, ஆதிதிராவிடா்-அருந்ததியா் பிரிவைச் சோ்ந்த தோ்வா்கள், ஆதிதிராவிடா் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களைத் தோ்வு செய்யலாமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
கலந்தாய்வின்போது, ஆதிதிராவிடா்-அருந்ததியா் பிரிவைச் சோ்ந்த தோ்வா்கள், தங்களது தகுதி மற்றும் தரவரிசை அடிப்படையில் ஆதிதிராவிடா் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்களைத் தோ்வு செய்யலாம் என்று விளக்கம் அளித்துள்ளது.