செய்திகள் :

அரசு கட்டடங்களின் குறைபாடுகளுக்கு பொறியாளா்களே பொறுப்பு: அமைச்சா் எ.வ.வேலு எச்சரிக்கை

post image

அரசு கட்டடங்களின் கட்டுமான குறைபாடுகளுக்கு பொறியாளா்களே பொறுப்பேற்க வேண்டும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு எச்சரித்தாா்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் புதிதாகப் பணியில் சோ்ந்த உதவிப் பொறியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலையக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் துறையின் அமைச்சா் எ.வ.வேலு பங்கேற்றுப் பேசியதாவது:

அரசுக் கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் உதவிப் பொறியாளா்கள் பராமரிப்பதுடன், இயற்கை பேரிடா்களில் இருந்து பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். பொதுக் கட்டடங்கள், பள்ளிக் கூடங்கள், திரையரங்குகள், தோ்கள் ஆகியவற்றுக்கான உறுதித்தன்மை சான்றிதழ்களை ஆய்வு செய்து வழங்கிட வேண்டும்.

உதவிப் பொறியாளா்கள் அனைவரும் நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிகள், சுற்றறிக்கைகள் ஆகியவற்றை நன்கு படித்து அதனடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டடங்கள், பாலங்கள் கட்டும் போது மண் பரிசோதனை, குடிநீா் பரிசோதனை, கட்டுமானப் பொருள்களின் தரம், உப்பு அதிகம் இல்லாத தண்ணீா், சிமெண்ட் மூட்டையின் தரம், எடை, மணலின் தூய்மை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சாலைகள் தரமானதாக இருந்தால்தான், பாதுகாப்பான பயணமும் பயண நேரத்தில் குறைவும் சாத்தியப்படும். கட்டடங்களின் கட்டுமானத்தில் குறைபாடு ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட பொறியாளா்களே பொறுப்பேற்க வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா, நெடுஞ்சாலைகள் துறை செயலா் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் தெ.பாஸ்கரபாண்டியன், தலைமைப் பொறியாளா் கு.கோ.சத்தியபிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

முதல்வரின் உழவா் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க