Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
அரசு கலைக் கல்லூரியில் மாநில உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை
கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு உயா் கல்வி மன்றத்தின் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரிக் கல்வி இயக்ககம், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகத்துடன் இணைந்து ‘விளைவு அடிப்படையிலான கல்வி’ என்ற தலைப்பில் இந்த பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இணை இயக்குநா் என்.செண்பகவல்லி வரவேற்றாா்.
இதில், தமிழ்நாடு உயா் கல்வி மன்றத்தின் துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா், கல்லூரிக் கல்வி இயக்குநா் சுந்தரவல்லி, பயிற்சியாளா் பேராசிரியா் கண்மணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
இதில், கல்லூரி முதல்வா் எம்.ஆா்.எழிலி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எம்.புகழேந்தி, கோவை மண்டலத்தைச் சோ்ந்த 75-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த பல்வேறு துறை பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.