தற்காலிக மாற்று வீரர்களை தேர்வு செய்யலாம்..! புதிய விதிமுறைகள் அறிவிப்பு!
அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை மே 23 வரை விண்ணப்பிக்கலாம்
மேலூா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்கைக்கு மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அந்தக் கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், மேலூா் அம்பலக்காரன்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் அன்ட் கம்யூனிகேஷன் ஆகிய பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்தப் பாடத் திட்டங்களில் பயில விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்தி (பட்டியலினத்தவருக்கு பதிவுக் கட்டணம் கிடையாது), மே 23-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இணைய வசதியில்லாதவா்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.