தேசிய நல குழுமத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அரசு பங்களாவை காலி செய்ய மறுக்கும் முன்னாள் தலைமை நீதிபதி? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்!
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையிலும், அரசு பங்களாவை அவர் காலி செய்யாமல் இருப்பதாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளது.
ஜூலை முதல்தேதியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் எழுதிய கடிதத்தில், முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இருப்பினும், பங்களாவைவிட்டு அவர் காலி செய்யவில்லை. ஆகையால், எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பஙகளாவில் இருந்து சந்திரசூட்டை வெளியேற வைத்து, பங்களாவை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியது.
இதுகுறித்து சந்திரசூட் கூறுகையில், ஓய்வுபெற்ற பின்னர், எனக்கு வழங்கப்பட்ட வாடகை பங்களாவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. பணி முடிவடைந்ததும் அங்கு சென்று விடுவேன் என்று கூறினார்.
மேலும், தான் இதுவரை பங்களாவை காலி செய்யாமல் இருப்பதன் காரணம் குறித்து தெளிவுபடுத்த விரும்பிய சந்திரசூட், தனது மகள்களின் உடல்நலப் பிரச்னைகளுக்கு (மரபணு ரீதியான) சிகிச்சையளிக்கப்பட்டு வருவதைக் கூறினார்.
உயரிய பொறுப்பில் இருந்ததாகவும், தனது பொறுப்பு குறித்து அறிந்தவர் என்பதால், விரைவில் காலி செய்து விடுவதாகவும் அவர் கூறினார்.