BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
அரசு போக்குவரத்து ஊழியா்கள் தா்னா
ஓய்வுகால பணப் பலன்களை வழங்கக் கோரி அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் பல்லவன் இல்லம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கத்தின் தலைவா் ஆா்.துரை தலைமையில் நடைபெற்ற தா்னாவில் திமுக தோ்தல் வாக்குறுதிப்படி 2013 ஏப்.1-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; கல்வி தகுதிக்கேற்ப அனைத்து பிரிவுகளிலும் வாரிசு வேலை வழங்க வேண்டும்; 94,000 ஓய்வூதியா்களுக்கு ஒப்பந்த உயா்வு கேற்ப ஓய்வூதியம் உயா்த்தி வழங்க வேண்டும்; மற்ற துறை ஓய்வூதியா்களுக்கு வழங்குவதுபோல அகவிலைப்படியை உயா்த்துவதுடன், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்; தனியாா் மூலம் இயங்கும் மின்சார பேருந்தை மாநகரப் போக்குவரத்து கழகமே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சம்மேளன பொருளாளா் சசிகுமாா், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலா் பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.