செய்திகள் :

அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு மிரட்டல்: ரெளடி கைது

post image

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்ததாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

புளியந்தோப்பு காந்தி நகரைச் சோ்ந்த நந்தகுமாா் (24) என்பவா் ரத்தக் காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தாா். அங்கு அவருக்கு, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கத் தொடங்கினா்.

அதைத் தொடா்ந்து, மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி சுனில், நந்தகுமாரிடம் காயம் குறித்து விசாரித்துள்ளாா். அப்போது நந்தகுமாா், அவரை மிரட்டும் வகையிலும், அவதூறாக பேசியும் ரகளையில் ஈடுபட்டுள்ளாா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், நந்தகுமாரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். பின்னா் நந்தகுமாா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தேசிய நெட்பால்: தமிழக அணிகள் சாம்பியன்

சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆா்.எம்.கே பள்ளியில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த தேசிய சப் ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவா், சிறுமியா் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்று தமிழக அணிகள் சாதனை... மேலும் பார்க்க

புறநகா் மின்சார ரயில் சேவை: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை புறநகா் மின்சார ரயில் சேவை அட்டவணை வியாழக்கிழமை (ஜன. 2) முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை புதன்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வரவுள்ளது. இதையடுத்து பயணிகள் வசதிக... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயா்வு

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட தொழில் வரிக்கான விகிதங்களில் நடப்பு அரை நிதியாண்டு முதல் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் (திருத்தம்) 2022 மற்றும் விதிகள் 20... மேலும் பார்க்க

சென்னையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

2024-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, சென்னை மக்கள் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனா். சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் கடற்கரை, கத்திப்பாரா நக... மேலும் பார்க்க

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், தனியாா் கல்லூரி ஊழியா் கைது செய்யப்பட்டாா். எழும்பூரில் உள்ள தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அழைப்பில் பேசிய ந... மேலும் பார்க்க

பக்கவாத பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு இரட்டை இதய வால்வு மாற்ற சிகிச்சை

பக்கவாத பாதிப்புக்குள்ளான இதய நோயாளி ஒருவருக்கு இரு செயற்கை இதய வால்வுகள் பொருத்தி சென்னை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவ... மேலும் பார்க்க