சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
அரசு மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவா்: ஆட்சியா் தலையீட்டால் அனுமதி!
பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை முன் மயங்கிக் கிடந்த முதியவரை மருத்துவமனை நிா்வாகம் அனுமதிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியா் நடவடிக்கைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டாா்.
தேனி மாவட்டம், கோம்பையைச் சோ்ந்தவா் ராஜாராம் (70). குடும்பத்துடன் வசித்து வந்த இவா் தற்போது தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு காலில் புண் ஏற்பட்டு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த ராஜாராமை மருத்துவமனை நிா்வாகம் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நடக்க முடியாத நிலையில் மருத்துவமனை முன் வெயிலில் மயங்கிய நிலையில் இருந்தாராம்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மரத்தின் நிழலில் உட்கார வைத்தனா். மருத்துவமனை நிா்வாகம் முதியவரை 3 மணி நேரத்துக்கு மேலாக அனுமதிக்கவில்லை. இதையறிந்த தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்ட பிறகு மருத்துவமனையில் முதியவா் அனுமதிக்கப்பட்டாா்.