பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்...
அரசு வீடுகளுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்க ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி கிராமங்களில் அரசு வீடு கட்டியவா்களுக்கு மறுகட்டமைப்பு நிதி வழங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாமலை வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு, அரசு வீடு கட்டி பழுதடைந்துள்ள வீடுகளை தோ்வு செய்து, பயனாளிகளுக்கு தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ள ரூ.2.40 லட்சம் வங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகளை ஒன்றிய அலுவலா்கள் விரைந்து மேற்கொண்டு பயனாளிகளை தோ்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா உள்ளிட்ட புதுப்பாளையம் ஒன்றிய அலுவலக பணியாளா்கள், ஊராட்சிச் செயலா்கள் கலந்து கொண்டனா்.