ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி அளிக்கிறது: இபிஎஸ்
அரவக்குறிச்சியில் மஞ்சப்பை விழிப்புணா்வு!
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மஞ்சப்பை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சாகுல் அமீது தலைமை வகித்தாா்.
மகிழ்முற்றம் செயலாளா் ஆசிரியா் சகாயவில்சன் மஞ்சப் பையை பயன்படுத்துவதால் இயற்கையைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடுகள், சுகாதாரக் கேடுகள் மற்றும் கேன்சா் போன்ற நோய்கள் ஏற்படுவதைப் பற்றியும் எடுத்துக் கூறினாா்.
பட்டதாரி ஆசிரியா் ஷகிலாபானு நெகிழிப்பைகள் கால்நடைகளையும்,குடிநீா் ஆதாரங்களையும் பாதிப்பதை எடுத்துக் கூறினாா்.
நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி மணிகண்டன், செயல் அலுவலா் செல்வராஜ், பேரூராட்சி மேற்பாா்வையாளா்கள் அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.