உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் புதிய உணவுக்கூடம் கட்ட பூமி பூஜை
சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் உள்ள சமுதாயக்கூடத்தில் மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதலாக உணவுக் கூடம் கட்டுவதற்கு பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் 2025- 26 ஆம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் மேம்பாடு மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்வதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக பேரூராட்சி செயலாளா் ஏ.எஸ்.செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.