ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: பாஜக எம்பி
அரியலூரில் பாமக ஆா்ப்பாட்டம்
அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் பாமகவினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் தலைவா் செளமியா அன்புமணி கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அரியலூா் வட்டாட்சியரகம் முன்பிருந்து ஊா்வலமாக வந்த பாமக நகரச் செயலா் விஜி தலைமையிலான நிா்வாகிகள் அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனா்.
இதேபோல், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மாவட்டச் செயலா் தமிழ்மறவன் தலைமையில், மாநில அமைப்புச் செயலா் திருமாவளவன், நகரச் செயலா் பரசுராமன் உள்ளிட்டோரும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.