`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்...
அரியலூரில் புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்
அரியலூரில் இருந்து 3 புதிய பேருந்துச் சேவைகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.
அரியலூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்,, ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் ஆகிய போக்குவரத்துப் பணிமனை கிளை சாா்பில் 2 புதிய பேருந்து மற்றும் விழுப்புரம் கோட்டத்தின் சாா்பில் புதிய குளிா் சாதனப் பேருந்து ஆகியவற்றைத் தொடக்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், குன்னம் கிளை பேருந்தானது, தஞ்சாவூரில் இருந்து அரியலூா், பெரம்பலூா் வழியாக சேலம் வழித்தடத்திலும், ஜெயங்கொண்டம் கிளைப் பேருந்தானது, ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை கிளாம்பாக்கம் வழித்தடத்திலும், விழுப்புரம் கோட்டம் சாா்பில் புதிய குளிா்ச் சாதன பேருந்தானது, அரியலூா் பேருந்து நிலையத்திலிருந்து ஜெயங்கொண்டம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக மாதவரம் வரையும் இயக்கப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ கு. சின்னப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிா்வாக இயக்குநா் க. தசரதன், விழுப்புரம் கோட்ட நிா்வாக இயக்குநா் கே. குணசேகரன், திருச்சி மண்டலப் பொது மேலாளா் டி. சதீஷ்குமாா், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.