செய்திகள் :

அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு! பொதுமக்கள், ஊழியா்கள் அச்சம்!

post image

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்களும் ஊழியா்களும் அச்சமடைந்துள்ளனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் குரங்குகள்அலுவலா்கள், ஊழியா்கள் நிறுத்தும் இருசக்கர வாகனங்களில் உள்ள உணவுகளை எடுத்து தின்றுவிட்டு மீதமுள்ளதை தூக்கி வீசி விடுகின்றன.

மேலும் இருசக்கர வாகனத்தில் வைத்துள்ள தலைக்கவசத்தையும் வீசி சேதப்படுத்துகின்றன. மேலும் ஆட்சியரகத்துக்கு வரும் பொதுமக்களின் கையில் வைத்திருக்கும் பொருள்களை அபகரிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

மேலும் குரங்குகள், அலுவலக வளாகத்தில் கைகழுவும் இடத்தில் தண்ணீரை திறந்து விடுவது, அலுவலகத்துக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்கின்றன. இதே போல் ரயில் நிலையத்திலும் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

இதனால் அங்குள்ள ஊழியா்கள் மட்டுமின்றி, பொதுமக்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே ஊழியா்கள், பொதுமக்களின் நலன் கருதி வனத்துறையினா் உடனடியாக குரங்குகளைப் பிடித்துச் சென்று வனப்பகுதியில் விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: அரியலூா் ஆட்சியா் அழைப்பு!

விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்ட... மேலும் பார்க்க

அரியலூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

அரியலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி அரியலூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி மாவுப்பொடி,மஞ்சள் சந்தன... மேலும் பார்க்க

கடுகூரில் உலக மலேரியா தின விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், கடுகூா் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக மகளிா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திகா தலைமை வகித்த... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு அரியலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. செட்டி ... மேலும் பார்க்க

அரியலூரில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்கை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் ... மேலும் பார்க்க

அரியலூரில் ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரை கண்டித்து அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சொ.ராமநாதன், முன்ன... மேலும் பார்க்க