குற்றாலம் சாரல் திருவிழா: "'உங்களுடன் ஸ்டாலினை' நடத்த தைரியம் இருக்கின்றது" - கே...
அரியலூா் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
அரியலூா் மாவட்டம், திருமானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழுவூா் மற்றும் மேலப்பழுவூா் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து கீழப்பழுவூா் ஊராட்சி அலுவலகத்திலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அழகாபுரம், ஓலையூா் மற்றும் விழுதுடையான் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ஓலையூா் கிராம ஊராட்சி சேவை மையத்திலும், அரியலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாலாஜாநகரம் கிராம ஊராட்சிக்கு அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றன.
எனவே, பொதுமக்கள் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை உட்பட அரசின் அனைத்து சேவைகளையும் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.