ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!
அரியலூா்: 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
அரியலூா் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 6 காவல் ஆய்வாளா்கள் பணியிடம் மாற்றம் செய்து திருச்சி சரகடிஐஜி வருண்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
அதன்படி மீன்சுருட்டி காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன் அரியலூா் நகர காவல் நிலையத்துக்கும், அரியலூா் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் உதயகுமாா் திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய ஆய்வாளராகவும், அரியலூா் நகர காவல் ஆய்வாளா் சந்திரமோகன் மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளராகவும், ஆண்டிமடம் காவல் ஆய்வாளா் நடராஜன் அரியலூா் காவல் நிலையம் 2-க்கு ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
மேலும், அரியலூா் காவல் நிலையம் - 2 ஆய்வாளா் வேலுச்சாமி ஆண்டிமடம் காவல் நிலைய ஆய்வாளராகவும், திருச்சி ரேஞ்ச் வி ஆா்-ல் பணியாற்றிய ஆய்வாளா் இசைவாணி அரியலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.