செய்திகள் :

அரையிறுதிக்கு முன்னேறிய சின்னர்..! கடின தரை போட்டிகளில் புதிய சாதனை!

post image

டென்னிஸ் தரவரிசையில் உலகில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர் யுஎஸ் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் லொரன்ஸோ முசெட்டியை வீழ்த்தி அரியிறுதிக்கு முன்னேறினார்.

சாதனை வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் ஆடவர் காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் நட்சத்திர வீரரும் நம்.1 டென்னிஸ் வீரருமான யானிக் சின்னரும் மற்றுமொரு இத்தாலி நாட்டின் முசெட்டியும் மோதினார்கள்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் சின்னர் 6-1, 6-4, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தினார்.

முதல் செர்வில் சின்னர் 91 வெற்றி சதவிகிதமும் இரண்டாவது செர்வில் 52 வெற்றி சதவிகிதத்தையும் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் சின்னர் தொடர்ச்சியாக ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சாதனைகள் விவரம்

அரையிறுதியிலும் வென்றால் இந்தாண்டின் அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

யானிக் சின்னர் தொடர்ச்சியாக 26 கடின தரை மேஜர் போட்டிகளில் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் நோவக் ஜோகோவிச்சை சமன்படுத்தியுள்ளார்.

கடின தரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றிகள்

  • ரோஜர் பெடரர் : 40 ( 2005 முதல் 2008)

  • நோவக் ஜோகோவிச் : 27 (2011 முதல் 2012)

  • யானிக் சின்னர் : 26 ( நடப்பு 2025 சீசனில்)

  • நோவக் ஜோகோவிச் :  26 (2015 முதல் 2016)

  • இவான் லெண்டில்: 26 (1985 முதல் 1988)

  • ஜான் மெக்கென்ரோர்: 25 (1979 முதல் 1982)

16-0

யானிக் சின்னர் தனது சக இத்தாலி நாட்டு வீரர்களுடன் 16 போட்டிகளிலும் வென்று 16-0 எனவும் முசெட்டியுடன் 3 போட்டிகளிலும் வென்று (3-0) அசத்தலான சாதனையை தொடர்ந்து வருகிறார்.

முதல்முறை...

ரஃபேல் நடாலுக்குப் பிறகு சின்னர் இளம் வயதில் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். இது சின்னருக்கு முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Yannick Cinner, the world number one in tennis rankings, advanced to the semifinals at the US Open.

செல்வராகவனின் அடுத்த படம்!

இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்தின் முதல்பார்வையை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.இயக்குநரும் நடிகருமான செல்வராகவனின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வையை நடிகர் தனுஷ் நாளை காலை 11 மணிக்கு வெ... மேலும் பார்க்க

எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!

பயிற்சியாளர் மீது எச்சில் துப்பிய விவகாரத்தில் இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸுக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அவர் மன்னிப்பு கேட்டிருந்ததும் குறிப்பிடத்... மேலும் பார்க்க

நெய்மருக்கு ரூ.8,800 கோடி சொத்து! அடையாளம் தெரியாத பில்லியனரின் உயில்!

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு அடையாளம் தெரியாத பில்லியனர் ஒருவர் 752 பவுண்டு மதிப்புடைய சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் உயிரிழந்ததாகக் கூறப்படும் பில்லியனர் ஒருவர், நெய்மர்... மேலும் பார்க்க

சந்திர கிரகணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

2025 ஆண்டின் முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) நிகழ உள்ளது. கிரகண காலத்தில் என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம், பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரங்கள் என்ன என்பதை தினமணியின் இணையதள ஜோ... மேலும் பார்க்க

மதராஸி முதல்நாள் வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் முதல்நாளில் எவ்வளவு வசூலித்ததென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமான வசூலை மட்டுமே குறிப்பிட்ட, உலக அளவில் எவ்வளவு என்பதைக் குறி... மேலும் பார்க்க