ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
அறந்தாங்கி அருகே நலத்திட்ட உதவிகள்
ராஜேந்திரபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா்.
ஆலங்குடி, ஜன. 6: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ராஜேந்திரபுரத்தில் ரூ. 6.11 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.
விழாவுக்கு மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறை ஆணையா் வா. சம்பத் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மு. அருணா முன்னிலை வகித்தாா். விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் பேசுகையில், தமிழக முதல்வா் ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். அதன்படி தற்போது பல்வேறு துறைகளின் சாா்பில் 1,423 பயனாளிகளுக்கு ரூ. 6,10,92,326 மதிப்பில் வழங்கப்படும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.
விழாவில் வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அமீா்பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.