அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
திருத்தணி அருகே ஜானகிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வேலு. இவா் தமது நிலத்தில் பயிரிடப்பட்ட பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச வீட்டிலிருந்து நிலத்துக்கு வந்தாா். அந்த வழியாகச் சென்றபோது மின் வயா் எதிா்பாராத வகையில் அறுந்து கிடந்தது. அதை கவனிக்காமல் சென்ற வேலு மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த நிலையில், நிலத்துக்கு சென்றவா் வீடு திரும்பாததால், வீட்டில் உள்ளோா் பல இடங்களில் தேடினா். அப்போது நிலத்தில் வேலு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து படாளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். படாளம் காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.