ம.பி: 7 மாதங்களில் 25 பேரை மணந்து மோசடி; நகை, பணத்துடன் அபேஸ்... கும்பலுடன் சிக்...
அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, தற்போது புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால் பாா்வையற்றோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா், கை மற்றும் கால் இயக்க குறைபாடுடைய நபா்களுக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் மற்றும் அமிலவீச்சால் சிந்தனையற்ற மற்றும் மதி இறுக்கமுடையோா், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோா், அறிவுசாா் குறைபாடுடையோா், கற்றல் குறைபாடுடையோா், மனநல பாதிப்பு, இரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்டோா் மற்றும் அவா்களுக்கு சேவை புரியும் தொண்டு நிறுவனத்தைச் சாா்ந்த பிரதிநிதிகள் இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமிக்கப்படவுள்ளனா்.
தகுதியுடைய நபா்கள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் வழியாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு மே 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தென் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட விண்ணப்பதாரா்கள் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600006 என்ற முகவரிக்கு மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.