அல்லு அர்ஜுனை இன்ஸ்டாகிராமில் பின்தொடருவதை நிறுத்திய ராம் சரண்! என்ன காரணம்?
தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுனுக்கும் ராம் சரணுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ‘கேம் சேஞ்சர்’ பாக்ஸ் ஆஃபிஸ் வசூல், இப்படத்தின் இயக்குநர் ஷங்கருக்கும் அதேபோல படத்தின் கதாநாயகன் ராம் சரணுக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையான அல்லு அரவிந்த், ‘கேம் சேஞ்சரை’ தோல்வியடைந்திருப்பதாக அண்மையில் நடைபெற்ற ‘தண்டேல்’ திரைப்பட விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியொன்றில் விமர்சித்துப் பேசியுள்ளார்.
முன்னதாக, கேம் சேஞ்சர் வெளியானதையொட்டி அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து வாழ்த்து தெரிவித்து பதிவொன்றும் வெளியிடப்படவில்லை. இதனால் ராம் சரண் வருத்தமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அல்லு அர்ஜுனை இன்ஸ்டாகிராமில் பின்தொடருவதை ராம் சரண் திடீரென நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், அல்லு அர்ஜுனின் சகோதரரான அல்லு சிரிஷை இன்ஸ்டாகிராமில் இன்னும் பின்தொடருகிறார் ராம் சரண்.
தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் மகனான ராம் சரணுக்கு அல்லு அரவிந்த் தாய்மாமன் உறவு முறையில் சொந்தக்காரர். அப்படியிருக்கையில், இவ்விரு குடும்பங்களுக்குமிடையிலான உறவு, தொழில்போட்டி காரணமாக விரிசலடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராம் சரண் - அல்லு அர்ஜுன் ஆகிய இரு நட்சத்திர மைத்துனர்களிடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேயிருப்பது தெலுங்கு திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.