செய்திகள் :

''அவங்க என்னை நடிக்காதீங்கன்னு சொன்னா அந்த நிமிஷமே நிறுத்திடுவேன்'' - நடிகை மதுபாலா பர்சனல்ஸ்

post image

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா தமிழ் சினிமாவுல கோலோச்சிய நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை மதுபாலா.

நடிகை மதுபாலா
நடிகை மதுபாலா

“என்னோட குழந்தைங்கதான் என் உலகம், சந்தோஷம், வலிமை எல்லாமே! என் கரியர், கனவுனு எல்லாத்தையுமே அவங்க சந்தோஷத்துக்கு அப்புறமாதான் வெச்சிருக்கேன். ‘அம்மா, நீங்க வொர்க் பண்ணாதீங்க. எங்ககூட இருங்க. We need you’னு என் குழந்தைங்க சொன்னா, கொஞ்சம்கூட யோசிக்காம, வருத்தப்படாம எந்த வேலை பண்ணிட்டிருந்தாலும் அதை அப்படியே நிறுத்திடுவேன்” – நடிகை மதுபாலா, தன் குழந்தைகளைப் பத்தி ஒருமுறை நெகிழ்ச்சியா சொன்ன வார்த்தைகள் இவை.

1991-ம் வருஷம், தமிழ் சினிமால அறிமுகமான அழகான 'ரோஜா'தான் மதுபாலா. தன் அழகான நடிப்பால், 'புது வெள்ளை மழை'யாய் ரசிகர்களின் மனசுல படர்ந்தவர், தமிழ் தாண்டி பல மொழிகளிலும் ஜொலிச்சார். மதுபாலா, பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பையில. இந்தி சினிமாவின் கனவுக்கன்னியா கோலோச்சிய நம்மூர் ஹேமமாலினியும் மதுபாலாவும் உறவினர்கள்.

'நான் சினிமால நடிக்க வந்தது ஒரு விபத்து'னு பாலிவுட் நடிகர்கள் பலரும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனா, மதுபாலா சின்ன வயசுலயே ரொம்ப தெளிவா சினிமாதான் தன் கரியர்னு தீர்க்கமா முடிவெடுத்திருக்காங்க. தொடக்கத்துல இவங்க பாலிவுட் படத்துல நடிக்கத்தான் முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா, கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொடுத்த கதையா, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்துல 'அழகன்' படத்துல அறிமுகமானாங்க.

நடிகை மதுபாலா
நடிகை மதுபாலா

“19 வயசுல நான் நடிக்க வந்தேன். 'அழகன்' படத்துக்காக கே.பாலசந்தர் சார் என்னை செலக்ட் பண்ணப்போ, எனக்கு அவரைப் பத்தி முழுசா தெரியல. நமக்குக் கிடைச்ச இந்த வாய்ப்பைச் சரியா பண்ணனும்னு மட்டும்தான் நினைச்சேன். ஆனா, போகப்போக அவரோட ஆளுமையைப் பாத்து ஆடிப்போயிட்டேன்.

கேமராவை எப்படிப் பாக்கணும், எப்படி நின்னு எந்த மாதிரி லுக் தரணும், எப்படி நடிக்கணும்னு குழந்தைக்குச் சொல்ற மாதிரி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். களிமண்ணா போன என்னை, அழகான சிலைபோல அவர் மோல்டு பண்ணார். 'You are fit for the industry'னு எனக்கு தைரியத்தை ஊட்டியதும் அவர்தான். அவர்தான் என் காட்ஃபாதர்''னு இன்டர்வியூ ஒண்ணுல நெகிழ்ந்து பேசிருக்காங்க மதுபாலா.

முதல் படமான 'அழகன்'ல வெயிட்டான கேரக்டர் மதுபாலாவுக்கு. வயசுல தன்னைவிட ரொம்ப மூத்தவரான மம்மூட்டி மீது காதல் வயப்படுற கல்லூரிப் பெண் ரோல். குழந்தைத்தனம், பிடிவாதம், குறும்பு, காதல், ஏக்கம் அப்படின்னு அத்தனை உணர்வுகளையும் படத்துல காட்டி ஒரு நடிப்பு ஜுகல் பந்தியையே நடத்தியிருப்பாங்க. குறிப்பா இதுல வர்ற ‘துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி’ பாட்டாகட்டும், ‘தத்தித்தோம்... வித்தைகள் கற்றிடும் தத்தைகள் சொன்னது தத்தித்தோம்’ என்ற கிளாசிக்கல் மெலடியாகட்டும், இரண்டிலுமே மதுவோட எக்ஸ்ப்ரஷன்ஸ் அவ்ளோ க்யூட்டா இருக்கும்.

அழகன் படம் பெரும் வெற்றி அடைஞ்சது. அந்தப் படம் வெளியாகி ரெண்டே மாசத்துல நடிகர் அஜய் தேவ்கனோட இவங்க சேர்ந்து நடிச்சு இந்தியில 'பூல் அவுர் கன்ட்டே' என்ற படமும் வெளியானது. இந்தப் படமும் பெரும் வெற்றிப்படமா அமைய, தமிழ், இந்தி ரெண்டிலுமே தன்னோட தடத்தை அழுத்தமா பதிச்சாங்க மதுபாலா. அதுமட்டுமல்லாம மலையாளப் படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சாங்க.

நடிகை மதுபாலா
வானமே எல்லை

அழகன் படத்துக்கு அப்புறம் இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்துல ‘வானமே எல்லை’யில வயதான பணக்காரரோட தனக்கு நடக்கவிருந்த திருமணத்துல இருந்து தப்பிச்சு ஓடுற கேரக்டர்ல இவங்க முகம் காட்டின மென்சோக நடிப்பு ஃபர்ஸ்ட் கிளாஸ். ஆனா, இது எல்லாவற்றுக்கும் உச்சமா, 1992-ல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்துல நடிச்ச ‘ரோஜா’ திரைப்படம் இவங்களை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்துச்சு.

கிராமத்துக்குறும்பு, வெகுளித்தனம், காதல், சென்ட்டிமென்ட், இயலாமை, துணிச்சல்னு மதுபாலா சீன் பை சீன் நடிப்புல அவ்ளோ வெரைட்டி காட்டியிருப்பாங்க. ரோஜா படத்தோட ரொமான்ஸ் காட்சிகள் அவ்ளோ க்யூட்டா இருக்கும். இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இந்தியா முழுக்க பெரிய வரவேற்பைப் பெற்றுச்சு. குறிப்பா தேசிய, சர்வதேச அளவுல பல்வேறு விருதுகளையும் வாங்குச்சு.

“மணி சார் படத்துல நடிச்சதை எனக்குக் கிடைச்ச வாழ்நாள் அங்கீகாரமா பாக்குறேன். ஒரு சினிமா மேக்கிங் வொர்க் ஷாப்புல கலந்துக்கிட்டதுபோல அவ்வளவு விஷயங்களை இந்தப் படத்துல நடிக்கிறப்போ கத்துக்கிட்டேன். குறிப்பா நடிப்புன்னு வர்றப்போ என்னை இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணுன்னு மணி சார் சொன்னதேயில்லை. என்னை சுதந்திரமா இயங்க அனுமதிச்சார். இயல்பிலேயே நான் ரொம்ப பிளேஃபுல்லான, துணிச்சலான பொண்ணுங்கறதால என்னால ரோஜா கதாபாத்திரத்துல ரொம்ப இயல்பா பொருந்திப் போக முடிஞ்சது”னு அந்தப்படத்துல நடிச்சது பத்தி பேட்டி ஒண்ணுல மது சொல்லிருக்காங்க.

நடிகை மதுபாலா
நடிகை மதுபாலா

ரோஜா படத்துக்கு அப்புறம் 'ஜென்டில்மேன்'. பிரம்மாண்டப் படைப்பாளியான ஷங்கர் இயக்கம், அர்ஜூன் ஹீரோ, கொஞ்சம் அசந்தாலும் கூட நடிக்கிறவங்களை தூக்கி சாப்பிட்டு விடுற கவுண்டமணி - செந்தில் காம்போன்னு அந்த கலர்ஃபுல் கூட்டணியிலும், மதுபாலாவோட சுசீலா கேரக்டர் தனிச்சு தெரியும்.

ஜென்டில்மேன் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து ஹிந்தித் திரைப்படங்களிலும், சில தெலுங்குப் படங்களிலும் நடிச்ச மதுபாலா, 1994-ல நடிகர் பிரசாந்த்தோட 'செந்தமிழ்செல்வன்', நடிகர் பிரவுதேவாவோட 'மிஸ்டர் ரோமியோ'வுலேயும் நடிச்சாங்க.

'மிஸ்டர் ரோமியோவுல பிரபுதேவாவோட டான்ஸ் பண்ணது, இந்தப் படத்துல நான் பேசுற டயலாக்குகள்ல இருந்த காமெடி சென்ஸ், ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ பாட்டு இப்பவும் யூத் ஆடியன்ஸ்க்கு பிடிச்சிருக்கிறதுன்னு இந்தப்படம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்.' இதுவும் மதுபாலாவோட வார்த்தைகள்தான். மிஸ்டர் ரோமியோ படத்துக்கு அப்புறம் மது பெருசா எந்தத் தமிழ் படத்திலேயும் நடிக்கல. தொடர்ந்து ஹிந்திப் படங்கள்ல கவனம் செலுத்தி வந்தாங்க. அதுக்கு அப்புறமா 1997-ல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்துல வெளிவந்த இருவர் படத்துல 'நறுமுகையே... நறுமுகையே' பாட்டுக்கு மட்டும் நடனமாடியிருந்தாங்க.

இருவர் படம் வந்தப்போ மட்டுமில்ல, இப்போ வரைக்கும் இந்தப்பாட்டும் மதுவின் டான்ஸும் பலரோட ஃபேவரைட். இருவர் படத்துக்கு அப்புறமா மதுபாலாவை தமிழ்ல்படங்களில் பார்க்கவே முடியல. தொடர்ந்து ஹிந்தி படங்கள்ல மட்டுமே நடிச்சிட்டு வந்த அவங்க 1999-ல ஆனந்த் ஷா என்கிற மும்பையைச் சேர்ந்த பிஸினஸ்மேனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

கணவருடன் மதுபாலா
கணவருடன் மதுபாலா

“விளம்பரப் படம் ஒண்ணுல நடிக்கிறதுக்காக பாலி போனப்போ என் கணவரை முதன் முதலா மீட் பண்ணேன். அந்த ஷூட்டிங்கிற்கு என் கூட வந்திருந்த என்னோட அப்பாவை அவர் ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டார். அந்த மாதிரியான கேரிங்கான ஒரு மனிதரை அப்போதான் முதன் முதலா பாத்தேன். அதுதான் என் மனதை டச் பண்ணிடுச்சு. அதுமட்டுமில்லாம அவர் ஓர் அம்மா பையன். தன் அம்மா மீது அன்பு செலுத்துற ஒருத்தர் மற்ற பெண்களையும் மரியாதையா அன்பாதான் நடத்துவார்னு எனக்குத் தோணுச்சு.

அதுவே எனக்கு அவர் மீது காதல் வரக் காரணமா அமைஞ்சு அது கல்யாணத்துல முடிஞ்சது. அதுக்கு அப்புறம் என்னோட இரண்டு பெண் குழந்தைகளான அமையா, கியா பிறந்தப்போ என்னோட உலகமே என் கையில இருக்கிறமாதிரி இருந்துச்சு.''

திருமண வாழ்க்கைல செட்டில் ஆனதுக்கு அப்புறமாவும் ஹிந்தி படங்கள்ல நடிச்சிக்கிட்டிருந்த மது 2013-ல நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நஸ்ரியா நடிச்சு வெளிவந்த ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் மூலமா தமிழ்ல கம்பேக் கொடுத்தாங்க. அதுக்கப்புறம் சில தமிழ்ப்படங்கள்ல நடிச்ச மது, 2021-ல வெளிவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘தலைவி’யில, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவின் கதாபாத்திரத்துல ரொம்ப அற்புதமா நடிச்சிருந்தாங்க.

தன் குடும்பத்துடன் மதுபாலா
தன் குடும்பத்துடன் மதுபாலா

“ரோஜா படத்துல நடிச்சதுக்கு அப்புறமா கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு அப்புறம் அரவிந்த்சுவாமியுடன் சேர்ந்து நடிச்சது மறக்க முடியாத அனுபவம். அவர்கூட மறுபடியும் சேர்ந்து நடிச்சது ஒரு ஃப்ரெண்ட் கூட பயணம் பண்ற மாதிரி ரொம்ப கம்பர்ட்டபிளா இருந்துச்சு”ன்னு மதுபாலா தன்னோட பேட்டி ஒண்ணுல சொல்லிருக்காங்க.

தலைவி படத்துக்கு அப்புறமா அருள்நிதி ஹீரோவா பண்ணியிருந்த 'தேஜாவு' படத்துல ஒரு போலீஸ் அதிகாரியா நடிச்சு கவனம் ஈர்த்திருந்தாங்க. 2023-ல வெளிவந்த ‘ஸ்வீட் காரம் காபி’-ங்கற தமிழ் வெப் சீரியல்ல குடும்பச்சிறையில் அடைபட்டு சுயத்தை இழக்கும் ‘காவேரி’ அப்படிங்கற கதாபாத்திரத்துல தத்ரூபமா நடிச்சு அசத்தியிருந்தாங்க மதுபாலா. சீனியர் நடிகை லட்சுமியுடன் இணைந்து இவங்க நடிச்சிருந்த இந்தத் தொடர் 2k கிட்ஸ் மத்தியிலும், யார் இவங்கன்னு தேட வெச்சது.

“தொண்ணூறுகள்ல நான் நடிக்க வந்தப்போ எந்த ரோல்ல நடிக்கிறதா இருந்தாலும் அதுக்காக ப்ரீ வொர்க் பண்ணவோ அல்லது அதை பத்தி ரிசர்ச் பண்ணவோ மாட்டேன். அப்படியே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிடுவேன். ஆனா, இப்போ இந்தப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு வர்றேன். இப்போ என் நடிப்பு சிறப்பா வர்றதுக்காக ரொம்பவே மெனக்கெடுறேன். அதேமாதிரி நடிப்புல நான் பீக்ல இருந்தப்போ ஃபிலிம்பேர் அவார்ட் போன்ற முக்கிய விருதுகள் எதையும் நான் வாங்கல. ஆனா, இப்போ என்னோட இந்த செகண்ட் இன்னிங்க்ஸ்ல நிறைய விருதுகள் வாங்க ஆசைப்படுறேன்”னு விகடனுக்கு அளித்த நேர்காணல்ல மனம் விட்டுப் பேசியிருக்காங்க மதுபாலா.

மதுபாலா
மதுபாலா

''ஒரு செலிபிரிட்டியா இருக்கிறதால நான் எதையும் இழந்ததா நினைக்கல. எனக்குப் பிடிச்ச வேலைகளை நான் இப்பவும் பண்றேன். கோயிலுக்குப் போறேன். பீச்சுல வாக்கிங் போய்க்கிட்டே சுண்டல் சாப்பிடுறது, சாலையோரக் கடைகள்ல நின்னு பானிபூரி சாப்பிடுறது, டீ குடிக்கிறதுன்னு நான் இப்பவும் ஜாலியா தான் இருக்கேன். அதே சமயம் பொதுவெளியில் யாராவது என்னை கவனிச்சு எனக்கு அட்டென்ஷன் கொடுத்தா அதையும் என்ஜாய் பண்றேன்.

சினிமாவைப் பொருத்தவரைக்கும் Friday to Friday தான் மெமரி அப்படின்னு சொல்வாங்க. ஆனா, எவ்வளவோ Friday-க்கு முன்னாடி ஒரு ஹீரோயினா நான் என்னோட வொர்க்கை ஸ்டாப் பண்ணிட்டேன். ஆனா, இன்னிக்கும் என்னை எல்லா வயசு மக்களும் நேசிக்கிறாங்க. இது எல்லாத்துக்குமே தமிழ் மக்களுக்கு நான் என் இதயத்திலிருந்து நன்றி சொல்லிக்கிறேன்”னு பேட்டி ஒண்ணுல மனம் திறந்து பேசிருக்காங்க மது.

தமிழ் மக்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான உங்களை எப்படி மறக்க முடியும்..? வி ஆல்வேஸ் லவ் யூ மதுபாலா!

எம்புரான் : `கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான கருத்து’ - 17 மாற்றங்கள் செய்தும் ஓயாத சர்ச்சை

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்த எம்புரான் சினிமா கடந்த மாதம் 27-ம் தேதி மலையாளம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது. சினிமா ரிலீஸ் ஆன மறுநாளில் இருந்தே குஜராத்தில் நடந்த கலவரம் ... மேலும் பார்க்க

எம்புரான் : `பாசிசத்தின் புதிய வெளிப்பாடு' - சங்பரிவாருக்கு எதிராக கொதித்த பினராயி விஜயன்

மோகன்லால் கதாநாயகனாக நடித்துள்ள எம்புரான் சினிமா கடந்த 27-ம் தேதி ரிலீஸ் ஆனது. லூசிஃபர் சினிமாவின் இரண்டாம் பாகமான எம்புரான் ஹாலிவுட் சினிமாவுக்கு இணையாக உள்ளதாக மலையாள திரை உலகில் கொண்டாடப்படுகிறது. ... மேலும் பார்க்க

Empuraan: ``சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்'' - வருத்தம் தெரிவித்த மேகான்லால்

எம்புரான் சினிமாவில் குஜராத் கலவரம் குறித்து சில கருத்துக்கள் உள்ளதாக சங்பரிவார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. `எம்புரான் சினிமாவை பார்க்கப்போவதில்லை' என கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரச... மேலும் பார்க்க

Santosh: இந்தியாவில் சிக்கலில் 'சந்தோஷ்' - ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படத்தில் என்ன பிரச்னை?

பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சந்தோஷ்' திரைப்படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படமாகும். இப்படம் கடந்த ஆண்டு பல நாடுக... மேலும் பார்க்க

ஆரம்பத்தில் ஓகே... ஆனா முடிவில் மாஸ்! - அஜித்தின் கார் ரேஸை நேரில் பார்த்த அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

’நான் மாடர்ன் பொண்ணு, அழுமூஞ்சி கிடையாது, அப்படி நடிக்க பிடிக்கல’ - நடிகை அஸ்வினி ஓப்பன் டாக்!

''நான் கன்னடப்பொண்ணு. ஆனா, பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையிலதான். அப்பா அங்க பிசினஸ் பண்ணிட்டிருந்தாரு. நான் பி.எஸ்சி முடிச்சுட்டு வேலைக்கு ட்ரை பண்ணிட்டிருந்தேன். அப்ப பெங்களூர்ல எனக்கு இன்டர்வியூ வந... மேலும் பார்க்க