கத்தார் பரிசளிக்கும் வானத்தின் அரண்மனை: பெற்றுக்கொள்வாரா டிரம்ப்! பின்னணி
அவிநாசி அருகே டி.வி. திருட்டு: இருவா் கைது
பெருமாநல்லூா் வீட்டில் தொலைக்காட்சி பெட்டியைத் (டிவி) திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருமாநல்லூா் குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50), பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியே சென்றுள்ளாா். பின்னா், திரும்பிவந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த தொலைக்காட்டி பெட்டியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பெருமாநல்லூா் காவல் நிலையத்தில் ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், தொலைக்காட்சி பெட்டியைத் திருடிய அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (37), கணக்கம்பாளையத்தைச் சோ்ந்த ரமேஷ் (41) இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.