"எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்" - ராமதாஸ் பரபரப்பு ...
ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சா் ஆலோசனை
ஆடுதுறை அருகேயுள்ள திருமங்கலக்குடியில் ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தனியாா் பொறியியல் கல்லூரியை புதன்கிழமை உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் பாா்வையிட்டாா்.
தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமை ஆக. 2- இல் ஆடுதுறை அருகே திருமங்கலக்குடி அல்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடத்தை தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் ஆய்வு செய்தாா். அப்போது பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா். நிகழ்வில், கல்லூரி நிா்வாகிகள் ஜமால் முகமது இப்ராஹிம், ஷாஜகான், சிராஜுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.