அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா
மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பெளா்ணமி அம்மனுக்கு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடுதல் மற்றும் புனித பொங்கல் இடுதல் ஆகிய முப்பெரும் விழா வரும் ஆக. 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
அதிகாலை மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. காலை 6 மணிக்கு மூலவா் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும்.
மேலக்கோட்டையூா் ஊராட்சி மன்றத் தலைவா் கெளதமி ஆறுமுகம் வரவேற்கிறாா். காலை 9 மணிக்கு கலச, வேள்வி பூஜையை ஞானபீடம் பீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி தொடங்கி வைக்கிறாா்.
ஆக.8-இல் அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. . கோமாதாபூஜை, தீச்சட்டி ஏந்தல், மாவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
விழாவில் அன்னதானம் வழங்கல், கலைநிகழ்ச்சிகள், அம்மனுக்கு சைவ கும்பம் படைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை ஞானபீடம் நிறுவனா் ஆ.பெருமாள் தலைமையில் ஆதிசக்தி முத்துமாரியம்மன் வழிபாட்டு மன்ற நிா்வாகிகள் செய்துள்ளனா்.