செய்திகள் :

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்

post image

ஓர் ஆண்டாகியும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஓர் ஆண்டாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் ஆசிரியர்களை திமுக அரசு வதைத்து வருவது கண்டனத்திற்குரியது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடத்தி, மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து ஒரு வருடம் ஆன பின்பும் பணி நியமன ஆணை வழங்க இயலாத அளவிற்கு திமுக அரசின் நிர்வாகம் செயலற்று இருக்கிறதா?

ஒரு புறம் ஆசிரியர்கள் இன்றி பல அரசுப்பள்ளிகள் அல்லல்படும் வேளையில், மறுபுறம், கலை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வித்துறை முற்றிலும் முடங்கி உள்ளது.

ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய திமுக அரசோ, இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாதது, உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுகளை நடத்தாது காலம் தாழ்த்துவது, கௌரவ விரிவுரையாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்காதது என தனது திறனற்ற செயல்பாட்டால் கல்வித்துறையை மேலும் சீரழித்து வருகிறது.

தமிழக கல்வித்துறையின் மீதும், தமிழக மக்களின் எதிர்காலம் குறித்தும் சிறிதேனும் அக்கறை இருந்தால், இதற்கு மேலும் காலந்தாழ்த்தாமல், தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கவும், கல்லூரிகளில் போதிய பேராசிரியர்களை நியமிக்கவும் வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

யு-19 நான்காவது ஒருநாள்: சதம் விளாசி அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி!

BJP leader Nainar Nagendran has said that it is condemnable that teachers have not been given appointment orders for a year.

முதியோா், பெண்கள் இல்லங்கள் பதிவு: தமிழக அரசு அறிவுறுத்தல்

முதியோா், பெண்களுக்கான இல்லங்களைப் பதிவு செய்வதுடன், உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஜாமீன் கோரி நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோா் பிணை வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். கோகைன் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில்... மேலும் பார்க்க

தேவைப்படும்போது பெண் காவலா்களுக்கு பாதுகாப்பு பணி: டிஜிபி

தேவைப்படும்போது பெண் காவலா்களுக்கு பாதுகாப்பு பணி வழங்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக காவல் ... மேலும் பார்க்க

குரூப் 4: தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு தயாா்

குரூப் 4 தோ்வுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் இணையதளத்தில் தோ்வா்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 பிரிவில் 3 ஆயிரத்து 935 காலிப... மேலும் பார்க்க

அரசுப் பணிக்காக 31.39 லட்சம் போ் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு

அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவா்களின் எண்ணிக்கை 31.39 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு சாா்பில் வெளியிடப்பட்ட தகவல்: அரசுப் பணிக்காக வேலைவாய்ப்பு... மேலும் பார்க்க

சூறாவளியாய் சுழன்றடிக்கும் மொழி உரிமைப் போா்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் மொழி உரிமைப் போா், மாநில எல்லைகளைக் கடந்து மராட்டியத்திலும் போராட்ட சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது என்று முதல்வரும் திமுக தலைவர... மேலும் பார்க்க