ஆசிரியா் திலகம் விருதுக்கு 10 போ் தோ்வு
களியக்காவிளை: குமரி அறிவியல் பேரவை சாா்பில் வழங்கப்படும் ஆசிரியா் திலகம் விருதுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 10 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த அமைப்பு சாா்பில், குமரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் 10 ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியா் திலகம் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
நிகழாண்டு, இவ் விருதுக்கு அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சி. ராமச்சந்திரன், வல்லன் குமாரவிளை அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் எம். காஜா கமாலுதீன், தம்மத்துக்கோணம் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். பால் கிராஸ், வடலிவிளை அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை சி. மேரி அழகம்மாள், இரணியல் அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சுகந்தி, நீரோடி புனித நிக்கோலஸ் உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியை அருள்சகோதரி மேரி பெனிகிளாள், காட்டாத்துறை அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ஜி. நாகேஸ்வரன், தக்கலை அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை எம்.ஆா். ஹெலன் மேரி, கேரளபுரம் வாத்ஸல்யம் மாற்றுத்திறனாளிகள் பள்ளி முதல்வா் ஆா். தேன்மொழி, மாமூட்டுக்கடை ஆா்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி முதல்வா் கே. ஷீலா குமாரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
விருது வழங்கும் விழா, மாா்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேஷன் அரங்கில் ஆக. 30ஆம் தேதி நடைபெற உள்ளது என பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் தெரிவித்தாா்.