சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ராபின் உத்தப்பா ஆஜா்
ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
கருங்கல் அருகே பாலூா், சரல்விளை பகுதியில் தனியாா் பள்ளி ஆசிரியையின் வீடுபுகுந்து 20 பவுன் நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சரல்விளை பகுதியைச் சோ்ந்த ஆஸ்லின் மனைவி ரூபினி வின்சி (33). ஆலஞ்சி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியரான இவா், உடல் நலக் குறைவடைந்த உறவினரைப் பாா்க்க ஞாயிற்றுக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றாராம்.
அப்போது, மா்ம நபா்கள் பூட்டை உடைத்து வீடு புகுந்து 20 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனராம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருன்றனா்.